|
வல்வெட்டித்துறை நகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களின் வரலாறு, பாரம்பரியம் தொடர்பான பல ஆவணங்களை உள்ளடக்கியதாக திரு.ந.நகுலசிகாமணி திருமதி. உமா நகுலசிகாமணி தம்பதிகளினால் கனடாவில் பாதுகாத்து இயக்கப்பட்டு வந்த “வல்வெட்டித்துறை வரலாற்று ஆவணக்காப்பகம்” அவர்களது பிள்ளைகளான சந்துரு,சௌமியன் ஆகியோரின் நினைவாக வல்வெட்டித்துறையில் திறந்து வைக்கப்பட்ட “வல்வை வரலாற்று ஆவணக்காப்பகம்” எதிர் காலத்தில் வல்வெட்டித்துறையின் பாரம்பரியத்தை மட்டுமல்லாது தமிழர்களின் வரலாறு, அவர்களது பாரம்பரிய முறைகளையும் எடுத்துக் காட்டும் ஒரு வரலாற்றுப் பnhக்கிசமாகவும் அமைய உள்ளது.
வல்வெட்டித்துறை நகர சபையின் வரலாற்று நூல்கள்,கப்பல் கட்டு; கலை,கப்பல் தொழிலில் பயன்படுத்திய கருவிக்ள்,வல்வெட்டித்துறை கடலோடிகளினால் பயன்படுத்திய கப்பல்களின் மாதிரி உருக்கள், வல்வெட்டித்துயைல் பாரம்பரியமாகப் பணன்படுத்தப்பட்டு வந்த பொருட்கள், வல்வெட்டித்துறை தொடர்பாக வெளிவந்த நூல்கள், வல்வெட்டித்துறை எழுத்தளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட நூல்கள் மற்றும் சங்க இலக்கியத்தில் கபிலரின் 99 வகையான பூக்கள் போன்றவற்றை ஆவணப்படுத்தும் அரும் பொருட் காட்சியகமாக இந்த வரலாற்று ஆவணக்காப்பகம் பொது மக்களுக்காகத் திறந்து வைக்கப்படவுள்ளது.
வல்வெட்டித்துறை நகர பிதா திரு.நடராஜா அனந்தராஜ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றபொழுது, “1974 ஆம் ஆண்டு 4வது உலகத் தமிழாராய்ச்சி மகாநாடு யர்ழ்ப்பாணத்தில் நடைபெற்றபொழுது வருகை தந்திருந்த வெளிநாட்டு பிரஜைகளுக்கு வல்வெட்டித்துறையில் வழங்கப்பட்ட வரவேற்புபசாரத்தின் பொழுது எங்களால் வெளியிடப்பட்டு கையளிக்கப்பட்ட “வல்வைக் கப்பலின் அமெரிக்க விஜயம்” என்ற நூலில் குறிப்பிட்டதற்கிணங்க வல்வெட்டித்துறையின் பாரம்பரியத்தை உணர்த்தும் வரலாற்றுக் காப்பகம் பற்றிய கனவு இன்று கனடாவில் இருந்து அவற்றைச் சேகரித்துக் கொண்டு வந்து எனது மைத்துணர் திரு.நகுலசிகாமணி அவர்கள் இங்கு ஒர வரலாற்று; காப்பகத்திற்கான அடித்தளத்தை உருவாக்கியுள்ளார்.இது காலப் போக்கில் வல்வெட்டித்துறையின் ஆவணக்காப்பகமாக மட்டுமல்லாது எமது பாரம்பரியத்தை வெளிக்காட்டும் ஒரு அரும்பொருட்காட்சியகமாகவும் வளர்ந்து வர வேண்டும் என்று வாழ்த்துகின்றேன். மற்றும் பண்டைய பொருட்கள் மற்றும் நூல்கள் போன்றவற்றை இந்தக் காப்பகத்தில் கையளித்து வல்வையின் வரலாற்று ஆவணக்காப்பகத்தின் பெருமையை உலகறியச் செய்ய எமது உறவுகள் முன் வரவேண்டும். எதிர்காலத்தில் வல்வெட்டித்துறை நகரத்தின் காப்பகமாக இது திகழவேண்டும் “ என்று குறிப்பிட்டார்.
வல்வை வரலாற்று ஆவணக் காப்பகத்தின் காட்சியறை யாழ் பல்கலைக் கழக வரலாற்றுத்துறைப் பேராசிரியர் திரு.ப.புஸ்பரடணம் அவர்களாலும கப்பல்களின் மாதிரி உருக்களின் காட்சியகம் கப்பல் கப்டன் திரு.எஸ்.சிவநேசன் அவர்களாலும் திறந்து வைக்கப்பட்டது.இந்நிகழ்வின் ஆசியுரைகளை யாழ் மாவட்ட பாராளுமன்னற உறுப்பினர் திரு.மாவை.சேனாதிராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினருமான திரு.க.சிவாஜிலிங்கம்,வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் திரு.பொ.தெய்வேந்திரம் ஆகியோர் வழங்கினர்.பல நூற்றுக்கணக்கான பொதும்ககளும் மாணவர்களும் பங்கு பற்றிய இந் நிகழ்வின நிறைவாக திரு.ந.நகுலசிகாமணி அவர்கள் நன்றியுரையை நிகழ்த்தினார்.
|