• default
  • noheader
  • Narrow screen resolution
  • Wide screen resolution
  • Wide screen resolution
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Wednesday 19 Jun 2013
YOU ARE HERE: Home
Valvettithurai Urban Council - Experimental website
உலக வங்கிக் குழுவினர் வல்வெட்டித்துறைக்கு விஜயம்
Tuesday, 19 March 2013 14:44

வல்வெட்டித்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களை மதிப்பீடு செய்வதற்காகவும்,எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய வேலைத் திட்டங்கள் தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொள்வதற்காகவும்  யாழ் மாவட்ட உள்ளுராடசி மன்றங்களில் வல்வெட்டித்துறை நகராட்சி  மன்றத்தைத் தெரிவு செய்து உலக வங்கியின் குழுவினர் வல்வெட்டித்துறைக்கு வருகை தந்து நகராட்சி மன்றத் தலைவர், உறுப்பினர்கள், செயலாளர், தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள், அலுவலர்கள் மற்றும் பொது மக்களுடன் கலந்துரையாடினர்.

Read more...
 
வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற கட்டடம் - ஒரு வரலாற்றுப் பார்வை!
Friday, 08 March 2013 23:34

வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் இந்தக் கட்டட வரலாறு என்பது ஒரு நீண்ட காலப்பகுதியை உள்ளடக்கியது.இது கடந்த 28 வருடங்களைக் கொண்ட நான்கு கட்டங்களைக் கடந்த நிலையில் இன்றைய இந்த நவீன கட்டடம் திறந்துவைக்கப்படவுள்ளது.

வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்திற்காக சொந்த நிலம் இல்லாத போது முன்னாள் நகர பிதாவாக இருந்த அமரர் திரு.ச.ஞானமூர்த்தி அவர்களின் இடைவிடாத முயற்சியினால் இதற்கான நிலம் பழைய ஒரு வீட்டுடன் சேர்த்துக் கொள்வனவு செய்யப்பட்டது.இதனைக் கொள்வனவு செய்வதற்காக அந்த நேரம் அவர் எடுத்த முயற்சிகள் அளப்பரியன.அவ்வாறு இருந்தபோதும் அவரது முயற்சிகள் எதிர்கால சபைக்கு கடன் சுமையை ஏற்படு;த்தவில்லை என்பதும் சுட்டிக் காட்டப்படவேண்டும்.சில காலம் வரை இதில் இருந்த பழைய வீட்டிலேயே நகராட்சி மன்றத்தின் அலுவலகம் இயங்கியது. அதற்குப் பின்னரே வல்வெட்டித்துறைக்கென நவீனமான ஒரு பணிமனை உருவாக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை வல்வெட்டித்துறை மக்களின் மனதில் தோன்றியது.ஆனால் சிறந்த கல்விமானாகவும், சமூக சேவையாளராகவும் விளங்கிய முன்னாள் நகர பிதா திரு.ச.ஞானமூர்த்தி அவர்களின் மறைவின் பின்னர் அதனை முன்னெடுப்பதற்கான ஒரு சிறந்த தலைமைத்துவம் இல்லாத நிலையில் வல்வெட்டித்தறையின் அபிவிருத்தியிலும் ஒரு தேக்கம் காணப்பட்டது.

Read more...
 
வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற புதிய கட்டிடத் திறப்பு விழா
Wednesday, 27 February 2013 07:26

வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்திற்காக அமைக்கப்பட்டுள்ள புதிய அலுவலகக் கட்டிடம் எதிர்வரும் முதலாம் திகதி பிற்பகல் 12.31 க்கும் 13.10. க்கும் இடைப்பட்ட சுப வேளையில் திறந்து வைக்கப்படவுள்ளது. வல்வெட்டித்துறை நகர பிதா நடராஜா அனந்தராஜ் அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கௌரவ.கே.என்.டக்ளஸ் தேவானந்தா அவர்களும்,கௌரவ ஆளுநர் ஜி.ஏ.சநதிரசிறி அவர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

Read more...
 
தொண்டைமானாற்றில் பறவைகளை அவதானித்தல் செயலமர்வு
Wednesday, 27 February 2013 07:05

தொண்டைமானாறு வெளிக்கள நிலையம் அண்மையில் திறந்து வைக்கப் பட்டதைத் தொடர்ந்து யாழ் மாவட்ட ஆசிரியர்களுக்கும் க.பொ.த. உயர் தரத்தில் விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்கும் மாணவர்களுக்குமான பறவைகளின் வகைகளையும் அவற்றின் நடத்தைகள் மற்றும் உருவ அமைப்புக்கள் பற்றி அறிந்து தொள்ளும் வகையிலான களப் பயணம் தொண்டைமானாறு வெளிக்கள நிலையத்துடன் அமைந்துள்ள ஆற்றங் கரையில் இடம்பெற்றபொழுதும்,அவை தொடர்பான விரிவுரைகளில் எடுக்கப்பட்ட படங்களையும்  காணலாம்.

Read more...
 
தொண்டைமானாறு வெளிக்கள நிலையத்தின் திறப்பு விழா
Wednesday, 30 January 2013 14:08

மாணவர்களின் ஆராய்வு ஊக்கத்தை  வளர்த்து, அவர்களிடையே விஞ்ஞான பாடத்திலான ஆர்வத்தை வளர்ப்பதற்கான அய்வு நிலையமாகச் செயற்பட்டு வந்த  தொண்டைமானாறு வெளிக்கள நிலையம் மீண்டும் தொண்டைமானாறு ஆலயச் சூழலில் ஆஙற்றங்கரையோரமாக புதிய வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது.இதன் திறப்பு விழா நிகழ்ச்சிகள் எதிர் வரும் 1 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிமுதல் 10.05 வரை உள்ள சுப வேளையில் திறந்து வைக்கப்படவுள்ளது. இந் நிகழிவின் முதன்மை அதிதிகளாக கௌரவ ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி அவர்களும், பாரம்பரியசிறு கைத்தொழில் அமைச்சர் கௌரவ கே.என். டக்ளஸ் தேவானந்தா அவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Read more...
 
<< Start < Prev 1 2 3 Next > End >>

Page 1 of 3

Random Image

library-valvettithurai.jpg

Polls

What do we need to consider first?
 

புலம் பெயர்ந்து நிரந்தரமாக வாழும் உறவுகளுக்கான அன்பான வேண்டுகோள்

நகர பிதா நடராஜா அனந்தராஜ்

வல்வெட்டித்துறை நகர அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கு போதிய நில வசதிகள் இல்லாத காரணத்தினால், பெரிய தபால் நிலையம்,சிறுவர் பூங்கா, விளையாட்டு மைதானம்,நவீன நூலகம்,போன்றவற்றை அமைப்பதற்கான நிதி இருந்தும் அவற்றை அமைக்கமுடியாது உள்ளது.

Read more...
தொண்டைமானாறு வெளிக்கள நிலையம் மீண்டும் தொண்டைமனாற்றில் இயங்கும்

மாணவர்களின் விஞ்ஞான அறிவையும், வெளிக்களப் பயிற்சி அனுபவங்களையும் மேம்படுத்தி விஞ்ஞானக் கல்வியை தரமானதாக்குவதற்காக உருவாக்கப்பட்ட தொண்டைமானாறு வெளிக்கள நிலையம் யுத்தத்தினால் சேதப்படுத்தப்பட்டு, கடந்த 25 வருடங்களுக்கு மேலாக அதன் முழுமையான செயற்பாட்டை மேற் கொள்ளமுடியாத நிலையில் யாழ்ப்பாணத்தில் தற்காலிகமாக இயங்கி வந்ததால் அதன் பயனை மாணவர்கள் முழுமையாக அடைய முடியாது இருந்தது.

Read more...