• default
  • noheader
  • Narrow screen resolution
  • Wide screen resolution
  • Wide screen resolution
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Saturday 28 Feb 2015
YOU ARE HERE: Home
Valvettithurai Urban Council - Experimental website
வல்வெட்டித்துறையின் வரலாறு ஒன்றின் அஸ்தமனம்
Sunday, 30 March 2014 14:20

கணித ஆசான் குமாரசிறிதரனுக்கு நெஞ்சம் கனத்த அஞ்சலி

“சிறிதரன் மாஸ்ரர்” என்று கல்வி உலகத்தில் பெருமையுடன் பேசப்பட்டுவந்த “பாலசுப்பிரமணியம் குமாரசிறிதரன் அவர்கள் தனது 66 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்துவிட்டார் என்ற செய்தியை தொலைபேசி வழியாக அறிந்ததும்; ஒரு கணம் அதிர்ந்து விட்டேன்.

1970 களில் வல்வெட்டித்துறையின் கல்விப் பாரம்பரியத்தை மீண்டும் ஒரு உன்னத நிலைக்குக் கொண்டு வரவேண்டுமென்று துடிப்புடன் செயற்பட்டவர்களில் அமரர் குமார சிறிதரன் அவர்களின் பங்கு அளப்பரியது.

வல்வை சிவகுரு வித்தியாலயம், பருத்தித்துறை காட்லிக் கல்லூரி ஆகிய கல்விச் சாலைகளின் புகழ்பூத்த பழைய மாணவராக இருந்து,கணிதபாடத்திற்கான ஆசிரியராகப் பதவியேற்று,புத்தளம்,சிலாபம் ஆகிய பிரதேச மாணவர்களின் கல்வி உயர்வுக்கு ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்து இலங்கையின் புகழ் பெற்ற கணித ஆசிரியர் என்ற பெருமையையும் பெற்றவர். பின்னர் வல்வை சிவகுரு வித்தியாலயத்தின் கணித ஆசிரியராக மிக அற்புதமாகச் சேவயாற்றிய சிறிதரன் மாஸ்ரர் அவர்கள் வல்வெட்டித்துறை மண்ணின் கல்வி வளர்ச்சியில் தன்னை அர்ப்பணித்து, உழைத்து மாணவர்களினதும் பெற்றோரினதும் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய ஆசானாக விளங்கினார்.

Read more...
 
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் தேசிய வாசிப்பு நிகழ்வுகள்
Monday, 13 January 2014 00:00

2013 ஆம் ஆண்டுக்கான தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளை முன்னிட்டு பாடசாலை மாணவர்களிடையேயும், முன்பள்ளி ஆசிரியர்களிடையேயும் வாசிப்புத் திறன் மற்றும் ஆக்கத்திறன் விருத்தியை மேம்படுத்தும் வகையில் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தினால், வழமை போன்று கட்டுரைப்போட்டி,ஓவியப் போட்டி,குறுக்கெழுத்து மற்றும் சுவரொட்டிப் போட்டிகளை நகராட்சி மன்ற எல்லைக்குட்பட்ட பாடசாலைகளிடையேயும்,முன்பள்ளிகளிடையேயும் நடத்தப்பட்டன.2012 ஆம் ஆண்டிலும்,2013 ஆம் ஆண்டிலும் நட்த்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ்களும்,பரிசுகளும் அணமையில் நகர பிதா நடராஜா அனந்தராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற உள்ளுராட்சி வார நிகழ்வில்  வழங்கப்பட்டன.அதற்கமைய நடத்தப்பட்ட பின்வரும்  போட்டிகளில் பரிசு பெற்ற மாணவர்களும்,பாடசாலைகளின்  விபரங்களும் பின்வருமாறு:

Read more...
 
தைத்திருநாள் வாழ்த்துக்கள்
Tuesday, 14 January 2014 06:34

புதிய 2014 ஆம் ஆண்டின் ஆரம்பத்துடன் பிறக்கும் தைத்திருநாளுடன் தமிழர்களின் உள்ளங்களில் மகிழ்ச்சி பொங்கவேண்டும். மனித உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும் என்ற உயர்ந்த குறிக்கோளுடன் புதிய ஆண்டை நாம் ஒவ்வொருவரும் வரவேற்போமாக.

Read more...
 
அகில இலங்கை மேசைப்பந்தாட்டப் போட்டியில் வல்வை மகளிர் சாதனை
Sunday, 05 January 2014 16:52

அகில் இலங்கை தேசிய ரீதியில் நட்ததப்பட்ட மேசைப்பந்தாட்டப் போடடியில் வல்வை மகளிர் மகா வித்தியாலய மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். அகில் இலங்கை ரீதியாக நடைபெறும் மேற்படி போட்டிகள் இம்முறை முதல் தடவையாக யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கடந்த மாதம் 21,22,23 ஆம் திகதிகளில் நடைபெற்ற போது,

Read more...
 
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் கீழ் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்திற்கு எதிரான வழக்கு முடிவுக்கு வந்தது
Wednesday, 20 November 2013 18:06

 

வல்வெட்டித்துறை தீருவில் வெளியில் வல்வெட்டித்துறை நகராட்சி  மன்றத்தினரால்,  “பொதுப் பூங்கா”  அமைப்பதற்கான தடை உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்று பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கடந்த ஜூலை மாதம் 11 ஆம் திகதி பருத்தித்துறை நீதிவான் நீதி மன்றத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட பொழுது சட்டத் தரணிகள் சங்கத்தினரால் எதிர்ப்புக் காட்டியதைத் தொடர்ந்து,அதற்கான அனுமதி நீதிபதியினால் மறுக்கப்பட்டது.ஆயினும் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்திற்கு எதிராக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால்  தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இரண்டாவது தவணையாக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் கௌரவ நீதிபதி திருமதி ஸ்ரீநிதி நக்தசேகரன் அவர்களின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

Read more...
 
<< Start < Prev 1 2 3 Next > End >>

Page 1 of 3

Random Image

valvai-muthumary.jpg

Polls

What do we need to consider first?
 

புலம் பெயர்ந்து நிரந்தரமாக வாழும் உறவுகளுக்கான அன்பான வேண்டுகோள்

நகர பிதா நடராஜா அனந்தராஜ்

வல்வெட்டித்துறை நகர அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கு போதிய நில வசதிகள் இல்லாத காரணத்தினால், பெரிய தபால் நிலையம்,சிறுவர் பூங்கா, விளையாட்டு மைதானம்,நவீன நூலகம்,போன்றவற்றை அமைப்பதற்கான நிதி இருந்தும் அவற்றை அமைக்கமுடியாது உள்ளது.

Read more...
தொண்டைமானாறு வெளிக்கள நிலையம் மீண்டும் தொண்டைமனாற்றில் இயங்கும்

மாணவர்களின் விஞ்ஞான அறிவையும், வெளிக்களப் பயிற்சி அனுபவங்களையும் மேம்படுத்தி விஞ்ஞானக் கல்வியை தரமானதாக்குவதற்காக உருவாக்கப்பட்ட தொண்டைமானாறு வெளிக்கள நிலையம் யுத்தத்தினால் சேதப்படுத்தப்பட்டு, கடந்த 25 வருடங்களுக்கு மேலாக அதன் முழுமையான செயற்பாட்டை மேற் கொள்ளமுடியாத நிலையில் யாழ்ப்பாணத்தில் தற்காலிகமாக இயங்கி வந்ததால் அதன் பயனை மாணவர்கள் முழுமையாக அடைய முடியாது இருந்தது.

Read more...